BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

தாயக எழுச்சிப் பாடலை பகிர்ந்த பாடகர் யாழில் கைது பொலிஸார் விசாரணை தீவிரம்

தாயக எழுச்சிப் பாடலை பகிர்ந்த பாடகர் யாழில் கைது பொலிஸார் விசாரணை தீவிரம்

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த பாடகர் ஒருவர் சமூக ஊடக தளத்தில் தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து பதிவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையின் பின்னர், குறித்த நபர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தற்போது விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், கைது செய்யப்பட்ட பாடகரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கைது சம்பவம் சமூக ஊடக பதிவுகள், பாடல் உள்ளடக்கங்கள் மற்றும் சட்ட ரீதியான எல்லைகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது. இருப்பினும், கைது செய்யப்பட்டவருக்கு எதிராக எந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"