BREAKING
செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு செப்டம்பர் 2026 தொழில் ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்! தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து தொடர் பாலியல் துஷ்பிரயோகம்? பிரித்தானிய கணவர் உட்பட 13 பேர் நீதிமன்ற விசாரணையில் மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி! “ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை மிஸ் பண்றேன்” – உருக்கமான பதிவு

புத்தளம் வானில் தோன்றிய மர்மப் பொருள் அதிகாலையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

புத்தளம் வானில் தோன்றிய மர்மப் பொருள் அதிகாலையில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு

புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை வானில் பிரகாசமான மற்றும் நீளமான எரியும் வால் கொண்ட மர்மப் பொருள் ஒன்று தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு பலரிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் கண்டதாக கூறப்படும் மக்கள், குறித்த பொருள் வானூர்தியை விட வேகமாக நகர்ந்ததாகவும், வானில் சில நொடிகள் தென்பட்ட பின்னர் மறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதை பார்த்த பலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர்.

மக்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் பரவியுள்ள நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு உறுதியான விளக்கமும் வெளியாகவில்லை. இருப்பினும், கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் ஒருவர், எரியும் வால் மற்றும் தோற்றத்தின் அடிப்படையில் இது விண்கல்லாக இருக்கக்கூடும் என கருத்து தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இதன் உண்மையான தன்மையை உறுதிப்படுத்த விஞ்ஞான ரீதியான மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"