BREAKING
‘அருள்வான்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியீடு – அருள்நிதி நடித்த படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்! அன்பே டயானா’ திரைப்படம் எப்படி? – முதல் விமர்சனமே செம்ம பாசிட்டிவ்! பாரி இளவழகன் மீண்டும் வெற்றிப்பாதையிலா? அர்ச்சுனா எம்.பி. நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை? – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் எச்சரிக்கை கொங்கோ தேசிய பூங்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு ‘அருள்வான்’ படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியீடு – அருள்நிதி நடித்த படத்தின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்! அன்பே டயானா’ திரைப்படம் எப்படி? – முதல் விமர்சனமே செம்ம பாசிட்டிவ்! பாரி இளவழகன் மீண்டும் வெற்றிப்பாதையிலா? அர்ச்சுனா எம்.பி. நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை? – கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடும் எச்சரிக்கை கொங்கோ தேசிய பூங்காவில் புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கான இடமாற்ற விண்ணப்பங்கள் ஆரம்பம் – கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

தமிழர் பகுதியில் விபத்தில் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு சி.சி.டி.வி காட்சியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

தமிழர் பகுதியில் விபத்தில் பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு சி.சி.டி.வி காட்சியால் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா இடிமன் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கிண்ணியா அஹமட் லேன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், ஈச்சந்தீவு பகுதியில் ஆற்று மணல் ஏற்றும் கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. சம்பவ தினத்தில் அதிகாலை வேலையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மற்றும் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், மணல் ஏற்றும் பணிக்குப் பயன்படுத்திய சவல் (மண்வாரி) மோட்டார் சைக்கிளின் கைப்பிடி பகுதியில் சிக்கியதால் வாகன கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வீதியில் தவறி விழுந்த அவர், எதிரே வந்த தேங்காய் ஏற்றிச் சென்ற லொறியின் சக்கரங்களுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறி மற்றும் அதன் சாரதியை கிண்ணியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"