BREAKING
வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார் வங்காள விரிகுடாக் கடற்பகுதி வெப்பமடையத் தொடங்கியுள்ளது. இன்று காலை 11.00 மணியளவில் இலங்கையை அண்மித்த கிழக்கு வங்காள விரிகுடாக் கடற்பகுதி 28 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வெப்ப அதிகரிப்பைக் கொண்டுள்ளது மட்டக்களப்பில் பேருந்து விபத்து! வெறும் வாக்குறுதிகள் அல்ல; தரவுகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றமே இன்று எமக்குத் தேவை ஜனாதிபதி அநுரவின் புதிய அதிரடி அறிவிப்பு; ஊழல் குற்றச்சாட்டில் உண்மைகளை வெளிப்படுத்துவோருக்கு சட்ட ரீதியான சலுகை மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்; கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய நண்பரும் சிக்கினார்

முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு அரகஜா திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்!

முதல்வர் விஜய்யின் நெற்றியில் கருப்பு பொட்டு அரகஜா திலகம் என்ன? வைரலாகும் புதிய தோற்றம்!

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள Vijay அவர்களின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது நெற்றியில் காணப்படும் கருப்பு பொட்டு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

அவர் அணியும் இந்த கருப்பு பொட்டு சாதாரணமானது அல்ல; இது “அரகஜா” திலகம் என அழைக்கப்படுகிறது. இந்த திலகம் புனுகு, ஜவ்வாது, பச்சை கற்பூரம், வெட்டிவேர் போன்ற வாசனைத் திரவியங்களையும், மூலிகைச் சேர்வுகளையும் கொண்டு தயாரிக்கப்படுவது என கூறப்படுகிறது.

அரகஜா திலகம் பெரும்பாலும் கோயில்களில் அபிஷேகப் பொருளாக பயன்படுத்தப்படுவதுடன், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை குறைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உள்ளது. இதனால் ஆன்மிகம் மற்றும் ஜோதிடம் மீது நம்பிக்கை கொண்ட பலரும் இதைப் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், முதலமைச்சர் விஜய்யிற்கு ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் மீது அதிக ஈடுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அரசியல் வாழ்க்கையிலும் சில சென்டிமென்ட்களை கடைப்பிடித்து வருகிறார் எனவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில், அவரின் நெற்றியில் உள்ள “அரகஜா” திலகம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. சிலர் இதை ஆன்மீக நம்பிக்கையின் ஒரு பகுதியாக பார்க்கும் போது, மற்றவர்கள் இதை புதிய அரசியல் அடையாளமாகவும் விவாதித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"