BREAKING
இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம்

பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள் சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

பெண்களின் புகைப்படங்களில் போலி கணக்குகள் சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பண மோசடி! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி போலியான கணக்குகள் உருவாக்கி பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பில் அண்மைக் காலங்களில் பெருமளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அறிமுகமில்லாத நபர்கள் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி நம்பகத்தன்மை ஏற்படுத்தி, பின்னர் பணம் கேட்டு ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், பொதுமக்கள் சமூக ஊடகங்களில் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, அறியாத நபர்களுடன் தனிப்பட்ட தொடர்புகளை உருவாக்குவது மற்றும் அவர்களிடம் நம்பிக்கை வைத்து தகவல்கள் பகிர்வது ஆபத்தானது என கூறப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட அல்லது உணர்ச்சிகரமான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தெரியாத நபர்களுக்கு அனுப்புவதை முற்றிலும் தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இத்தகைய தகவல்கள் பின்னர் மிரட்டல் அல்லது பணம் பறிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் தகவல் பாதுகாப்பு நிபுணர்கள், சமூக ஊடகங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான கணக்குகள் குறித்து உடனடியாக புகார் அளிக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"