BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஈரான் போர் விமானம் ; அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படங்கள்

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஈரான் போர் விமானம் ; அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படங்கள்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில், ஈரானின் இராணுவ போர் விமானம் ஒன்று பாகிஸ்தானில் தரையிறங்கியதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் போயிங் 747 ரக இராணுவ விமானம் பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான நிலையங்களில் காணப்பட்டதாக கூறப்படும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. குறிப்பாக RC-130H வகை விமானம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் - அமெரிக்கா மோதலுக்கிடையில் சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகளில் பாகிஸ்தான் நடுவர் நாடாக செயல்பட்டு வரும் நிலையில், இந்த விமானம் தரையிறங்கிய விவகாரம் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், பாகிஸ்தான் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க செனட் அதிகாரி கிரஹாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், விமானம் தரையிறங்கியதாக கூறப்படும் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால், இந்த விவகாரம் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"