BREAKING
இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் இருமுறை மரண தண்டனை பெற்ற குற்றவாளி வெலிக்கடை சிறையில் அடைப்பு பிரசவத்திற்குப் பின் இளம் தாய் உயிரிழப்பு: நீதி கோரி கணவரின் உருக்கமான வேண்டுகோள் மீன ராசியில் வக்ர சனிபகவான்: ரிஷபம், மிதுனம், துலாம் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும் காலம் என ஜோதிட கணிப்பு கோடைக்காலத்தில் பசலைக்கீரை ஏன் அவசியம்? உடலுக்கு தரும் 10 முக்கிய ஆரோக்கிய நன்மைகள் வைரலாகும் ஜேசன் சஞ்சயின் உரை; தந்தை விஜய் குறித்து பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம்

ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ச ஆஜர்!

ஊழல் ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ச ஆஜர்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று (மே 12) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். அங்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகளின் விசாரணைகளுக்கு முகம் கொடுத்து வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறினார். இதன்போது, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பலத்த பாதுகாப்பு மற்றும் அவரைத் தொடர்ந்து சென்ற பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்பைக் கண்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் திகைப்பும் ஏற்பட்டது.

அதேவேளை, கடந்த கால ஊழல்கள் தொடர்பாக எவ்வித பாரபட்சமும் இன்றி விசாரணைகள் நடத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏற்கனவே சூளுரைத்திருந்தார். சட்டத்திற்கு முன்னால் தகுதி தராதரமின்றி அனைவரும் சமம் என்பதையே இந்த விசாரணை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். இதே விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவிடமும் ஏற்கனவே விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"