BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை!

வெளிநாடு செல்லும் பிக்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்: இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை!

தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பிய 22 இளம் பிக்குகள் 110 கிலோ போதைப்பொருட்களுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் எந்தவொரு பௌத்த பிக்கும், தனது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடமிருந்து கட்டாயமாகப் பரிந்துரைகளைப் பெற வேண்டும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க இது குறித்துத் தெரிவிக்கையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த இந்தச் சட்டம் இனிவரும் காலங்களில் மிகக் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தற்காலிக கட்டளைச் சட்டத்தின் 41 மற்றும் 42-ஆவது பிரிவுகளின் கீழ், பயணங்களைக் கண்காணிக்கும் அதிகாரத்தை மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான குழுவுக்கு வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"