BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல் விளம்பரம் பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக த

மருத்துவமனையில் பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை; நோயாளியின் அநாகரிக செயல் விளம்பரம் பெண் வைத்தியர் ஒருவரை அநாகரிகமாக த

களுத்துறை பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவருக்கு நோயாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த அநாகரிக சம்பவம் இடம்பெற்றுள்ளமை, சுகாதார துறையின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறித்த சந்தேக நபர் முதலில் மத்துகம பிம்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுத்துறை நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல்நிலை பரிசோதனைக்காக சென்ற பெண் வைத்தியரிடம் அவர் திடீரென அநாகரிகமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக எச்சரிக்கப்பட்டபோதிலும், மீண்டும் இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க முயன்ற வைத்தியரிடம் சந்தேக நபர் இரண்டாவது முறையாகவும் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாலியல் தொல்லை வழங்கியதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, தெற்கு களுத்துறை பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தற்போது அவர் பொலிஸ் பாதுகாப்பில் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவம், மருத்துவர்களின் பணிசூழலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. குறிப்பாக, பெண்கள் பணியாற்றும் துறைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இது நினைவூட்டுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"