ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சிறப்பு தள்ளுபடிகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 46ஆவது நிறைவாண்டை கொண்டாடுகிறது.
இதன் காரணமாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, செப்டம்பர் முதலாம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை இந்த சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த சலுகைகள் அனைத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உத்தியோகபூர்வ வலைத்தளம் மூலம் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.