கிளிநொச்சியில் நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுப்பு

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில் உள்ள புதைகுழிக்கு நீதி வேண்டியும் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி தமிழ் கட்சியில் ஒன்று சேர்ந்து முன்னெடுத்துள்ள கையெழுத்து போராட்டம் நான்காவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம், கிளிநொச்சியில் பூநகரி வாடியடியில் மேற்கொள்ளப்பட்டது.
சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம் மு.சந்திரகுமார் தலைமையில் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.