வேற்றுகிரகவாசிகள் போல் தோற்றமளிக்கும் மிதக்கும் கோளத்தை கண்டுப்பிடித்த விஞ்ஞானிகள்!

ஆஸ்திரேலியாவின் முன்னணி வானவியல் ஆய்வகருவிகளில் ஒன்றான ASKAP (Australian Square Kilometre Array Pathfinder) தொலைநோக்கி மூலம், பால்வீதியின் பரந்த விரிவில் டிரில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் மிதக்கும், மர்மமான புதிய கோளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோளம், வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் மேலெழுப்பும் வகையில், விசித்திரமான தோற்றத்தையும், மிதக்கும் தன்மையையும் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன் வடிவமைப்பு மிகவும் சீரானதாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் இருப்பதால், இதற்கு பண்டைய கிரேக்க மொழியில் “முழுமையானது” அல்லது “சரியானது” என்பதற்கான வார்த்தையான ‘டெலியோஸ்’ (Telios) எனப் பெயரிட்டுள்ளனர்.
இது போன்ற வடிவமைப்பைக் கொண்ட இயற்கை விண்வெளி பொருள்கள் மிகவும் அபூர்வமானவை என வானியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறித்த கோளம் எவ்வாறு உருவானது, அதன் இயற்கை பண்புகள் என்ன என்பதைக் குறித்து தற்போது விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி ஆராய்ச்சியில் புதிய கதவுகளைத் திறக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. மேலும் இது, அண்டவெளியில் நம்மால் இதுவரை புரிந்துகொள்ளப்படாத பல மர்மங்களை வெளிச்சமிட்டுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.