சிறுவர்களின் பாதுகாப்பிற்காக இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகும் புதிய அம்சங்கள்

மெட்டா நிறுவனம் (Meta) இயங்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் சமூக வலைதளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.
16 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் இன்ஸ்டாகிராமில் நேரலை செய்ய பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இன்ஸ்டாகிராமைத் தவிர பேஸ்புக் மற்றும் மெசஞ்சர் செயலிகளிலும் விரைவில் வர இருக்கிறது. ஆரம்ப கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது. உலகிலேயே முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டோரின் சமூக வலைத்தள பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை சிறுவர்களின் கணக்குகள் ஸ்லீப் மோடில் செலுத்தப்படும்.
இவை வரும் ஒரு இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளன.