BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, WTI வகை மசகு எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 88.27 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது சுமார் 4.42 சதவீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை, ப்ரெண்ட் வகை மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 98.84 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது. இது 5.41 சதவீத சரிவைக் காட்டுகிறது.

மேலும், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மெர்பன் வகை கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 119.88 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் 11.31 சதவீத குறைவாகும்.

இந்த எண்ணெய் விலை சரிவு, எரிபொருள் இறக்குமதி செலவுகளை குறைக்கும் வாய்ப்பை உருவாக்கக்கூடும் என்பதால், இலங்கைக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"