BREAKING
விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல் விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல்

விஜய்சங்கீதா விவாகரத்து விவகாரம்: அம்மா ஷோபா பேசும் உண்மை நிலை

விஜய்சங்கீதா விவாகரத்து விவகாரம்: அம்மா ஷோபா பேசும் உண்மை நிலை

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட செய்திகள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சங்கீதா தாக்கல் செய்த மனு ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் சங்கீதா 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாஷா என்ற மகள் மற்றும் சஞ்சய் என்ற மகன் உள்ளனர். கடந்த மாதம் 27ம் திகதி, விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் உள்ளதால் சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இதனால் இருவரும் பிரிந்து வாழும் நிலைக்கு வந்துவிட்டதாகவும், சமாதானம் ஏற்பட வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், விஜய்யின் மகன் சஞ்சய் தற்போது ஒரு படம் இயக்கி அதில் பிஸியாக இருப்பதாகவும், அவர் தந்தையுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையோ இல்லாமல் பிரிந்து இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் தாய் ஷோபா சங்கீதா குறித்து கூறியவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவர் கூறியதைப் பார்த்தால்:

“நானாக எதுவும் எனது விருப்பப்படி சமைக்க மாட்டேன். சங்கீதாவிடம் என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சமைத்துக் கொடுப்பேன். அது பற்றி நான் சங்கீதாவுக்கு போன் செய்து கேட்டால் அவர் ‘நான் பசங்களிடம் கேட்டு சொல்கிறேன்’ என்பார். பின்னர் சஞ்சயிடமும் சாஷாவிடமும் ‘அத்தை வீட்டுக்கு போகப் போகிறோம், என்ன வேண்டும்?’ எனக் கேட்டு, அதற்கேற்ப நான் பிரியாணி செய்து வைப்பேன். அவர்கள் வீட்டுக்கு வந்து திருப்தியாக சாப்பிடுவார்கள். சங்கீதா பக்கா கௌஸ் வைஃப்; குழந்தைகளை அவர் பார்த்துக்கொள்வது போல யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது.”

இதன் மூலம் சங்கீதாவின் குடும்பப் பொறுப்புகளை மிகச்சிறப்பாக கடைப்பிடிப்பது, மக்களைப் பற்றி கவலை கொண்டிருப்பது போன்ற பண்புகள் வெளிப்படுகிறது என அம்மா ஷோபா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"