BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

முடியை அடர்த்தியாக்கும் வீட்டிலேயே செய்யக்கூடிய காபி ஹேர் ட்ரீட்மென்ட்

முடியை அடர்த்தியாக்கும் வீட்டிலேயே செய்யக்கூடிய காபி ஹேர் ட்ரீட்மென்ட்

பொதுவாக அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகள் முக்கியமானது. முடி உதிர்தல், பொடுகு, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரைமுடி போன்ற பல பிரச்சனைகள் தினசரி வாழ்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதற்கு வீட்டிலேயே காபி தூளை பயன்படுத்தி முடியை அடர்த்தியாக்கும் சில முறைகள் உள்ளன.

முதல் முறையீடு:

முடியை அடர்த்தியாக்க மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க, காபி தூள் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து பயன்படுத்தலாம். அதற்கான தேவையான பொருட்கள்:

காபி தூள் – 2 ஸ்பூன்

முட்டை – 1

முதலில் கிண்ணத்தில் இந்த பொருட்களை நன்கு கலந்து, தலைமுடியின் உச்சந்தலிருந்து முடி முனை வரை தடவி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மென்மையான ஷாம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலசி கழிக்க வேண்டும்.

இரண்டாவது முறையீடு:

மற்றொரு முறையாக, காபி தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்:

காபி தூள் – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1 கப்

முதலில் தேங்காய் எண்ணெயில் காபி தூளை சேர்த்து குறைவான தீயில் சூடேற்ற வேண்டும். அதை வடிகட்டி, வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசி கழிக்க வேண்டும்.

பலன்கள்:

இந்த ஹேர் ட்ரீட்‌மென்ட் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தலைமுடியின் உச்சந்தலை ஆரோக்கியமாகவும், முடியை மென்மையாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்கிறது. தொடர்ந்தும் பயன்படுத்தும் போது முடி உதிர்வு குறையும், முடி வலிமை பெறும், நரைமுடி பிரச்சனை குறையும், சருமம் பளபளப்பாக இருக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு வீட்டில் எளிதில் காபி ஹேர் ட்ரீட்‌மென்ட் செய்து, உங்கள் முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள முடியும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"