BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

"காதலனுக்காக கணவனுக்கு எமன்!" - கார் ஏற்றி, கழுத்தை நெரித்துக் கொலை: கொள்ளை நாடகமாடிய புதுப்பெண் அஞ்சுவின் கொடூர முகம் அம்பலம்.

"காதலனுக்காக கணவனுக்கு எமன்!" - கார் ஏற்றி, கழுத்தை நெரித்துக் கொலை: கொள்ளை நாடகமாடிய புதுப்பெண் அஞ்சுவின் கொடூர முகம் அம்பலம்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்த ஆஷிஷ் என்பவருக்கும் அஞ்சு என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தேனிலவுக்காக வெளியே சென்றிருந்த போது, ஒரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது.

மனைவியின் நாடகம்:
விசாரணையின் போது அஞ்சு பொலிஸாரிடம் கூறுகையில், "அடையாளம் தெரியாத வாகனம் எங்கள் மீது மோதியது. நான் மயக்கமடைந்து விழுந்தேன். அந்த நேரத்தில் என்னிடம் இருந்த நகைகள் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்" என அழுதுகொண்டே நாடகமாடியுள்ளார்.

சந்தேகத்தை கிளப்பிய தடயங்கள்:
பொலிஸார் மற்றும் தடய அறிவியல் துறையினர் நடத்திய ஆய்வில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன:

காயங்கள் இல்லை: கார் மோதி கணவன் பலியான போதும், அருகில் இருந்த மனைவிக்கு ஒரு சிறு கீறல் கூட இல்லாதது பொலிஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

முரண்பட்ட வாக்குமூலம்: விபத்து குறித்து அவர் கூறிய தகவல்களில் பெரும் முரண்பாடுகள் இருந்தன.

கைரேகை ஆதாரம்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் சோதனையில், ஆஷிஷ் கார் மோதி மட்டும் இறக்கவில்லை என்பது தெரிந்தது. அவரை அடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்றிருப்பது உறுதியானது. குறிப்பாக, அவரது கழுத்தில் மனைவி அஞ்சு மற்றும் சிலரின் கைரேகைகள் பதிவாகி இருந்தன.

காதலனுடன் சேர்ந்து சதித்திட்டம்:
அஞ்சுவின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் தனது பக்கத்து வீட்டு இளைஞருடன் (முன்னாள் காதலன்) நீண்ட நேரமாகப் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமணத்திற்குப் பிறகும் காதலனுடன் தொடர்பில் இருந்த அஞ்சு, கணவனுடன் வாழப் பிடிக்காமல் அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

சம்பவத்தன்று திட்டமிட்டபடி கணவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மறைந்திருந்த காதலன் மற்றும் அவனது கூட்டாளிகள் ஆஷிஷ் மீது காரை ஏற்றி, பின்னர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

கொலைக்கு பின் அரங்கேறிய 'கொள்ளை':
கொலைக்கு பின் இது விபத்து போலத் தெரிய வேண்டும் என்பதற்காக, அஞ்சு தனது நகைகளைத் தானே கழற்றிக் காதலனிடம் கொடுத்துவிட்டு, கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். தற்போது அஞ்சு மற்றும் அவரது காதலன் உள்ளிட்ட கும்பலை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"