BREAKING
தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

செம்மணி புதைகுழி அறிக்கையில் உண்மைகள் மறைப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ சமர்ப்பித்த நான்காவது இடைக்கால அறிக்கையில் உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

குறித்த அறிக்கையில் உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ராஜ் சோமதேவவிடம் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நேற்று (26) பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செம்மணி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புத் தொகுதிகள், ஆட்லெறி பெரல், காலணிகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட சான்றுகள் நான்காவது அறிக்கையில் விடுபட்டுள்ளதாகவும், சில விடயங்கள் திரித்து அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோய் காரணமாக மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதனை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் முழுமையான சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சர்வதேச மேற்பார்வை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய நான்காவது இடைக்கால அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் ரவிகரன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"