BREAKING
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி!

மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பகுதியில் இராணுவத்தினர் பயிற்சி!

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தும் மேய்ச்சல் தரைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அமைந்துள்ள மேய்ச்சல் தரைப் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் சட்டபூர்வமான மேய்ச்சல் நிலமாகப் பிரகடனப்படுத்துமாறு கோரி, கால்நடை வளர்ப்பாளர்கள் நீண்டகாலமாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இராணுவத்தினர் அப்பகுதியில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது தமக்கு மேலும் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இராணுவத்தினரைக் கண்டதும் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் அச்சமடைந்து காடுகளுக்குள் ஓடி மறைவதாகவும், இதனால் அவற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஓடும் கால்நடைகள், மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் தரப்பினரின் பயிர்ச்செய்கை நிலங்களுக்குள் புகுந்துவிடுவதால், மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் வெறுப்புணர்வையும் தோற்றுவிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மேய்ச்சல் தரைப் பகுதியில் முன்னெடுக்கப்படும் இராணுவப் பயிற்சிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"