BREAKING
கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம் கொழும்பில் கொட்டித்தீர்த்த பேய்மழை; அரசாங்கத்தை விமர்சித்த யூடியூப்பர் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி மாயம் ; தேடுதல் நடவடிக்கை தீவிரம் தகவல் அறியும் சட்டத்தில் காதலி பற்றி 1,886 கேள்வி கேட்ட இளைஞர் ; அதிர்ந்து போன அதிகாரிகள்! தமிழர் பகுதியொன்றில் சோதனையில் சிக்கிய இளைஞன் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய அமெரிக்க கடற்படை விமானம்

மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை

மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை

 நாட்டின் 22 மாவட்டங்களில் இன்று (07) இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்போது பலத்த காற்று மற்றும் கனமழையும் பெய்யக்கூடும் என்பதால், மின்னல் தாக்கத்தினால் உயிராபத்து ஏற்படுவதுடன், மின்சாதனங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் வெளிப்புற விளையாட்டுகள், கட்டுமானப் பணிகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் பொது நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், பாதுகாப்பான கட்டடங்களுக்குள் அல்லது மூடப்பட்ட வாகனங்களுக்குள் தஞ்சமடையுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தனி மரங்களின் கீழ் தங்குவதைத் தவிர்க்குமாறும், நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"