BREAKING
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி ; திறக்கும் அதிர்ஷ்ட கதவு பொலிஸ் காவலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; குற்றம் சுமத்தும் உறவினர்கள் யாருமற்ற குழிக்குள் 491 நாட்கள்... துண்டிக்கப்பட்ட வலது கால் ; வரலாற்றில் முதன் முறை நடந்த சம்பவம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடரும் சறுக்கல், எப்போது தான் மீண்டு வருவார் விஜய் தேவரகொண்டா ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி ; திறக்கும் அதிர்ஷ்ட கதவு பொலிஸ் காவலில் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ; குற்றம் சுமத்தும் உறவினர்கள் யாருமற்ற குழிக்குள் 491 நாட்கள்... துண்டிக்கப்பட்ட வலது கால் ; வரலாற்றில் முதன் முறை நடந்த சம்பவம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடரும் சறுக்கல், எப்போது தான் மீண்டு வருவார் விஜய் தேவரகொண்டா

சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

சவூதியில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து வெளியான தகவல் ; நிறுத்தப்பட்ட விமான சேவைகள்

சவூதி அரேபியாவில் பொதுமக்கள் உட்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களில் அண்மைய சம்பவங்களால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, இலங்கைப் பணியாளர்கள் மற்றும் யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிராந்தியப் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு – ரியாத் மற்றும் கொழும்பு – தம்மாம் இடையிலான அனைத்து நேரடி விமான சேவைகளையும் நவம்பர் 1ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிடும் உம்ரா யாத்திரிகர்கள் மற்றும் பயண ஏற்பாட்டாளர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஹஜ் குழு அறிவுறுத்தியுள்ளது.

வானூர்தி பயணங்களில் இடையூறுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதால், யாத்திரிகர்களின் பாதுகாப்பையும் அவசரகாலத் திரும்பும் பயண ஏற்பாடுகளையும் உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"