BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

ஷிரந்தி ராஜபக்சவை சுற்றி இறுகும் விசாரணை; சிக்கப்போகும் சிநேகிதிகள்!

ஷிரந்தி ராஜபக்சவை சுற்றி இறுகும் விசாரணை; சிக்கப்போகும் சிநேகிதிகள்!

கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனைக்கு 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான CT Scan இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதாகக் கூறி இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் நிதி முறைகேடு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் மனுவொன்றையும் மேலதிக அறிக்கையொன்றையும் சமர்ப்பித்த பொலிஸார் இதனைத் தெரிவித்துள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்ச, டி.எஸ்.கே.எஸ். குமாரி மற்றும் கே.எச். நிரோஷா ஆகிய மூவருக்கு எதிராகப் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதிவான், விசாரணைகளை நிறைவுசெய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை ஒத்திவைத்துள்ளார்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"