BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

தமிழர் பகுதியொன்றில் வீதிகளில் இடம்பெறும் ஆபத்தான செயற்பாடு ; சட்ட நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

தமிழர் பகுதியொன்றில் வீதிகளில் இடம்பெறும் ஆபத்தான செயற்பாடு ; சட்ட நடவடிக்கை தொடர்பில் எச்சரிக்கை

மன்னார் ஜீவபுரம், ஜிம் ரோன் நகர், எமில் நகர், சாந்திபுரம் பனங்கட்டு கொட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் சில மீனவர்கள் வீதிகளில் வலைகளை ஆபத்தான முறையில் உலர விடுவதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த செயல்பாட்டைக் கைவிடுமாறு நகரசபையால் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு, சிலர் அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வீதிகளில் வலைகளை உலர விடுகின்றனர்.

அதுமட்டுமன்றி, வலைகளை அகற்றுமாறு அறிவுறுத்தும் போது, “வலைகளை உலர விட வேண்டாம் என்றால் வேறு எங்கே உலர விடுவது?” எனக் கேள்வி எழுப்பி, தமது செயல்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், தமது தொழில் தேவைகளைக் காரணம் காட்டி, பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும் என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

வீதிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணிப்பதற்கான பொதுவிடங்களாகும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், வீதிகளில் கிடக்கும் வலைகளில் சிக்கி விழும் சம்பவங்களும் தொடர்ச்சியாக மன்னாரில் பதிவாகி வருகின்றன.

கடந்த வருடம் கர்ப்பிணித் தாய் ஒருவர் வலையில் சிக்கி விழுந்ததாகவும், நேற்று சிறுமி ஒருவரும் வலையில் சிக்கி விபத்துக்குள்ளான தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து, வீதிகளில் மீன் வலைகளை உலர விடுவதை உடனடியாக நிறுத்துமாறு மன்னார் நகர சபையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது டன், இனி வரும் காலங்களில் இவ்வாறு செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"