BREAKING

யாழ். மருத்துவர் உயிரிழப்பு வழக்கு ; மகளின் பிணை மனு ஒத்திவைப்பு

யாழ். மருத்துவர் உயிரிழப்பு வழக்கு ; மகளின் பிணை மனு ஒத்திவைப்பு

குறித்த பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வழக்கு தொடர்பான சுருக்க முறையற்ற விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இதுவரை நிறைவடையவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்குடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சான்றுப் பொருட்களில் உயிரிழந்த மருத்துவர் தயாளினி திலீபனின் நகைகளும் உள்ளடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களை முன்வைத்து, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு அரச தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த பிணை மனுவை எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"