BREAKING
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு "தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்"; போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம் தையிட்டி விகாரைக்கு சென்ற தவிசாளர் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பிய பொலிஸார் ஒரே இரவில் ஆலயத்திலும் விகாரையிலும் திருட்டு சம்பவங்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு "தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்"; போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம் தையிட்டி விகாரைக்கு சென்ற தவிசாளர் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பிய பொலிஸார் ஒரே இரவில் ஆலயத்திலும் விகாரையிலும் திருட்டு சம்பவங்கள்

தையிட்டி விகாரைக்கு சென்ற தவிசாளர் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பிய பொலிஸார்

தையிட்டி விகாரைக்கு சென்ற தவிசாளர் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பிய பொலிஸார்

வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பிரதேச சபை சபா மண்டபத்தில் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மேலும் விகாரைக்கு அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியினை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து கூட்டம் நிறைவுற்ற பின்னர் , தவிசாளர் தலைமையில் சபை பெரும்பாலான சபை உறுப்பினர்கள் விகாரை அமைந்துள்ள பகுதிக்கு விஜயம் செய்தனர்.

அதன் போது விகாரையின் வாயிலில் காவல் கடமையில் இருந்த பொலிஸார் தவிசாளர் தலைமையில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை

அதனால் , விகாரையில் வெளியே நின்று பிரதேச சபையின் அனுமதிகள் இன்றி சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளில் முன்னெடுக்கப்படும் புதிய கட்டுமான பணிகளை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு சென்றனர்.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"