BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை

மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்தாமல், அதற்கேற்ப செயற்படுமாறு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலான பேருந்துகளுக்கு தனியார் பேருந்துகளால் எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருசில பேருந்துகளுக்கு மாத்திரமே இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை அனைத்துத் தனியார் பேருந்து உரிமையாளர்களுடனும் தொடர்புபடுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமல், நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து முறைமைக்கு ஏற்ப செயற்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்னும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையைத் தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மெட்ரோ நிறுவனத்தின் ஊடாக மேலும் 50 பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பேருந்துகள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று நகரங்களிலும் மெட்ரோ பேருந்து சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"