BREAKING
வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு 14 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறை! ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு 14 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறை! ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு

ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு

தீனியாவல பாலித தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அந்த அமைச்சின் செயலாளர், புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உள்ளிட்ட பலர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

இலங்கை அரசியலமைப்பின் 9ஆவது உறுப்புரையின்படி, பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஞானசார தேரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அவரைக் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்திய போது காவியுடை அகற்றப்பட்டு சிறைச்சாலை உடையில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நடவடிக்கை பௌத்த மத ஒழுக்க விதிகளுக்கும் முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவிட கோரி மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைக்கு வழிவகுக்கும் சிறைச்சாலை விதிமுறை அல்லது சுற்றறிக்கை ஏதேனும் நடைமுறையில் இருந்தால், அதனையும் வலுவிழக்கச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அத்துடன், ஞானசார தேரரின் காவியுடையை களைப்பதை தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிரதிவாதிகளுக்கு எதிராகப் பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"