BREAKING
ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தமிழர் பகுதியில் சகோதரர்களுக்கு நடந்த பெரும் துயரம்; தம்பியின் கண் முன்னே பிரிந்த அண்ணனின் உயிர் வேலைநிறுத்தப் போராட்டம் ; பல்கலைக்கழகப் பரீட்சைகள் ஒத்திவைப்பு ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல் இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்! ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி; இந்த ராசிகளுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தமிழர் பகுதியில் சகோதரர்களுக்கு நடந்த பெரும் துயரம்; தம்பியின் கண் முன்னே பிரிந்த அண்ணனின் உயிர் வேலைநிறுத்தப் போராட்டம் ; பல்கலைக்கழகப் பரீட்சைகள் ஒத்திவைப்பு ஒரே காதலனுக்காக போட்டி ; 2 இளம்பெண்கள் பேருந்து நிலையத்தில் செய்த செயல் இந்து சமுத்திரத்தில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம்!

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி

குறித்த பெண் அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பேரணியில் கலந்துகொண்டு, தனது பிள்ளைகளைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும் ஊடகங்களிடம் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.

2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் வசித்து வந்த தனது மூன்று ஆண் பிள்ளைகளையும், சிறிலங்கா கடற்படையினரும் ஈபிடிபி உறுப்பினர்களும் இணைந்து கடத்திச் சென்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடத்தப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் 16 வயதைக்கூட எட்டாத சிறுவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவரையும் இழந்துள்ள நிலையில், வாழ்வாதாரமின்றி வறுமையில் தவித்து வரும் குறித்த தாயின் நிலை தொடர்பில், தமிழ்த்தேசிய பேரவையின் பிரமுகரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளருமான கருணாகரன் நாவலன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, தமிழ்த்தேசிய பேரவையின் இணைத்தலைவரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவருமான கே.வி.தவராசாவின் 50,000 ரூபா நிதிப் பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள், குறித்த தாயின் இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டன.

நீண்டகாலமாகத் தனது பிள்ளைகளைக் காணாமல் தவித்து, நீதிக்காகப் போராடி வரும் தாயின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"