BREAKING
இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நள்ளிரவில் மனைவி, மகள்களுடன் வீடு திரும்பிய தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி; வெளியான மேலதிக தகவல் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது 4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால் ஆடிப்போன பொலிஸார் இலங்கையில் 03 இலட்சம் பேருக்கு நாய்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் நள்ளிரவில் மனைவி, மகள்களுடன் வீடு திரும்பிய தொழிலதிபருக்கு பேரதிர்ச்சி; வெளியான மேலதிக தகவல் நீதிமன்றத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒரு வருடத்திற்குப் பின்னர் கைது 4 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த தந்தை ; அதீத பாசத்திற்காக இப்படியா? மகளின் செயலால் ஆடிப்போன பொலிஸார் இலங்கையில் 03 இலட்சம் பேருக்கு நாய்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டன

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைத் தொகுதி கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், வத்தளை பள்ளியவத்தை, நீர்கொழும்பு பிட்டிபன களப்பு மற்றும் சிலாபத்துறை காயக்குளி ஆகிய கடற்கரை மற்றும் களப்புப் பகுதிகளில் 29,30 ஆம் திகதிகளில் (2026 செப்டம்பர் 29 – 30) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2360 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதியைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி, மேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் களனி நிறுவனத்தினால் பள்ளியவத்தை கடல் மற்றும் கடற்கரைப் பகுதி மற்றும் நீர்கொழும்பு பிட்டிபன களப்புப் பகுதியை உள்ளடக்கியதாக 2026 செப்டம்பர் 29 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதிகளில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான 24 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 942 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், வடமேற்கு கடற்படைக் கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரப்புத்த நிறுவனத்தினால் சிலாபத்துறை காயாக்குளி கடற்கரைப் பகுதியை உள்ளடக்கியதாக புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அக்கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்குரிய 40 உரைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கடற்படையினரின் நடவடிக்கைக்கு மத்தியில் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1425 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி சட்டத்தின் பிடியில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், வத்தளை பள்ளியவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு வத்தளை பொலிஸாரின் உதவியும் கிடைக்கப் பெற்றதுடன், இந்நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதி மேல் நடவடிக்கைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையம், கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகம் மற்றும் மன்னார் மதுவரித் திணைக்கள அலுவலகம் ஆகியவற்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"