BREAKING
இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம் இங்கிலாந்தில் படிக்க சென்ற இந்திய மாணவர் செய்த கேவலம்; 30 ஆண்டுகள் சிறை! யாழில் இரண்டு இலட்சம் பேர் தொடர்பில் வெளியான தகவல் ; விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் லாஃப்ஸ் விவகாரம்; சபையில் பெரும் சலசலப்பு அரசியலை விட்டு புதிய பாதையில் பயணிக்கும் முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜயசேகர! லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு ; சபையில் அமைச்சர் விளக்கம்

ஏழு கன்னி மலையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

ஏழு கன்னி மலையில் தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; தீவிரமாகும் விசாரணை

மஸ்கெலியா - நோட்டன் ஏழு கன்னி மலைப் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரின் சடலம் இன்று (29) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பிரதேச மக்கள், நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு கற்களுக்கு இடையில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 22ஆம் திகதி மஸ்கெலியா மவுஸ்சாகலை தோட்டத்தில் வசித்து வந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையான தமிழ் குடும்பஸ்தர்  காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஏழு கன்னி மலைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலத்தை  சகோதரர்  அடையாளம் காட்டியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சென்று சடலத்தை பார்வையிட்ட பின்னர், அது டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"