BREAKING
FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு FCIDயில் ஆஜராகாத ஷிரந்தி ராஜபக்ச ; சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை பொலிஸாரின் சோதனையில் பிடிபட்ட இளைஞன் ; சிக்கிய ஆபத்தான பொருட்கள் தமிழர் பகுதியில் வயோதிய குடும்பத்திற்கு அதிகாலையில் நேர்ந்த அசம்பாவிதம் முதியவரின் உயிரை பறித்த லொறி ; தீவிரமாகும் விசாரணை அடுத்த 24 மணிநேரத்தில் வலுவிழக்கும் தாழமுக்கம் ; மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம்

யாழ் திருநெல்வேலி சந்தையில் இடம்பெற்ற சம்பவத்தால் அதிர்ச்சி! பொது மக்கள் அச்சம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் கூலி தொழில்புரியும், கொக்குவில் பகுதியை சேர்ந்த இருவர் மதுபோதையில் தர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றையவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலாளியை மடக்கி பிடித்ததுடன்,தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் சந்தேகநபரை ஒப்படைத்தனர். சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில், சந்தை முடிவடைந்த பின்னர், சந்தையில் கூலி தொழில் செய்வோர் போதையில் அட்டகாசம் புரிவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக  சந்தை கட்டட தொகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதனால், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் அவதானம் செலுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"