BREAKING
ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது

தேசிய அடையாள அட்டைகளுக்காக பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்ய அனுமதி

தேசிய அடையாள அட்டைகளுக்காக பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்ய அனுமதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்குத் தேவையான 50 இலட்சம் முன்கூட்டியே அச்சிடப்பட்ட பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்திற்குத் தேவையான குறித்த அட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்க, கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதற்கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சர்வதேச போட்டி நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்ட நிலையில், எட்டு நிறுவனங்கள் தமது விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்தன.

விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னர், உயர்மட்ட கொள்வனவுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தை ஜேர்மனியைச் சேர்ந்த M/s Muhlbauer ID Services GmbH நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தின் பெறுமதி 4.93 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"