BREAKING
மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்! கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட் ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்! மூன்று நாட்களுக்குள் 350,000 லிட்ரோ எரிவாயு விநியோகம்! கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவர்ந்த நடிகை கரீனா கபூர்.. Stunning போட்டோஷூட் ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் விமான நிலையத்தில் கைது பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இளம் செய்திவாசிப்பாளர் தற்கொலை; சம்பவத்தால் ஷாக்!

கிளிநொச்சியில் ஏ வீதியில் விபத்து - துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் பலத்த காயம்

கிளிநொச்சியில் ஏ வீதியில் விபத்து - துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் பலத்த காயம்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் விளாவோடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்று (02.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதியூடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்ததாக கூறப்படும் மகிழுந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுநர் உடனடியாக மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"