BREAKING
எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம் 2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய நிபந்தனை: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல் எங்கள் வழியில் குறுக்கிட்டால்..! ஓமானுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை காசாவிற்கான 15 அம்ச திட்டவரைவு: ஜாரெட் குஷ்னர் நெதன்யாஹுவைச் சந்திக்க திட்டம் 2026 - கலாசார, உணவுத் திருவிழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் கொங்கோவில் இதுவரை இல்லாத மிக மோசமான பேரழிவு: எபோலா உயிரிழப்பு உயர்வு நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முக்கிய நிபந்தனை: மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்

சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற சிரான் பாஷிக்: விமானம் மாறியதால் சதித்திட்டம் முறியடிப்பு

சினிமா பாணியில் தப்பிக்க முயன்ற சிரான் பாஷிக்: விமானம் மாறியதால் சதித்திட்டம் முறியடிப்பு

துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான சிரான் பாஷிக், பொலிஸாரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக ஆள்மாறாட்டம் உள்ளிட்ட சினிமா பாணியிலான திட்டத்தை தீட்டியிருந்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரான் பாஷிக் தன்னைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட மற்றொரு நபரைத் தயார் செய்து, தாம் பயணிக்கும் அதே விமானத்தில் அவரையும் இலங்கைக்கு அழைத்து வர திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், உண்மையான சிரான் பாஷிக்கிற்கு பதிலாக அந்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்து கைது செய்யப்படுவார் எனவும், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உண்மையான சிரான் பாஷிக் தப்பிச் செல்வார் எனவும் திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், போலி நபர் பொலிஸாரிடம் சிக்கிக் கொள்ளும் நேரத்தில், வேறு ஒரு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமான நிலையத்திலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடொன்றுக்குத் தப்பிச் செல்ல சிரான் பாஷிக் திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் பெருந்தொகையான பணத்தை செலவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

துபாய் பொலிஸார் சிரான் பாஷிக்கை நாடு கடத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வழங்காத நிலையில், துபாயில் உள்ள தகவல் வழங்குநர் ஒருவரின் மூலம் இலங்கை பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிரான் பாஷிக்கை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை பொலிஸார் அவதானம் செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்த விமானத்திற்குப் பதிலாக வேறு ஒரு விமானத்தில் சிரான் பாஷிக் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதனால் அவர் முன்கூட்டியே தயார் செய்து வைத்திருந்த போலி நபரை அந்த விமானத்தில் அனுப்ப முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக திட்டமிடப்பட்ட ஆள்மாறாட்ட சதித்திட்டம் தோல்வியடைந்து, சிரான் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனியாக வந்து இறங்கிய நிலையில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஈரானுக்கு ஆதரவாக துபாயில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்பான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் துபாய் பொலிஸாரால் சிரான் பாஷிக் கைது செய்யப்பட்டிருந்தார்.

இரண்டு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள சிரான் பாஷிக்கை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"