BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

கொழும்பு முருகன் ஆலய நகைகள் கொள்ளை; தலைமறைவான பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

கொழும்பு முருகன் ஆலய நகைகள் கொள்ளை; தலைமறைவான பிரதம குருவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

கொழும்பு 02, கொம்பனி வீதியில் அமைந்துள்ள முருகன் ஆலயத்துக்குச் சொந்தமான பெறுமதியான நகைகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆலயத்தின் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் பிரதம குருவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன ஆலய நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி கொட்டாஞ்சேனை புதிய செட்டியார் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்ததாக சந்தேகநபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, காணாமல் போன நகைகளை மீட்பதுடன், குறித்த பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"