BREAKING
பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணுக்கு காதலன் செய்த வெறிச்செயல் ; மெசேஜ்களால் வந்த வினை உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு இலகுவான வழிமுறை மிக இளவயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த பிரித்தானிய தமிழ் சிறுமி மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் ; பிரதி அமைச்சர் பிரதீப் இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

கடத்தப்பட்ட இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்: சிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

கடத்தப்பட்ட இளைஞர்கள் வழக்கில் அதிரடி திருப்பம்: சிஐடி விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

கடத்தப்பட்ட இளைஞர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படையின் கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், குறித்த முகாமின் சுவரொன்றில் எழுதப்பட்டிருந்த முகவரி, கடத்தப்பட்ட சாந்த சமரவீர என்பவரின் கையெழுத்து என விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முகாமில் ஆறு பெண்களும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பெண்களில் ஒருவர் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அவர் விடுவிக்கப்பட்டால் கடற்படைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என்ற அச்சத்தில் கொலை செய்யப்பட்டதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த வழக்குகள், புதிய தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், வழக்கின் மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடற்படைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் கப்பம் பெறும் கும்பலுடன் தொடர்புடைய இந்தக் கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட, ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரினால் 667 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு இந்தக் கடத்தல்கள் தொடர்பில் தகவல் இருந்ததாகவும், தெஹிவளை பகுதியில் ஐந்து இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"