BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

கனடாவில் டொராண்டோ தமிழ் திரைப்பட விழா; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு

கனடாவில் டொராண்டோ தமிழ் திரைப்பட விழா; உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெறவுள்ள 7வது டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா (TTIFF) எதிர்வரும் செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சுயாதீன மற்றும் வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் தங்களது படைப்புகளை சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த திரைப்பட விழா வழங்குகிறது.

இவ்விழாவிற்கான திரைப்பட சமர்ப்பிப்புகளின் இறுதித் திகதி ஆகஸ்ட் 11 என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறும்படங்கள், முழுநீள திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சமூக மற்றும் இசை சார்ந்த படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தமிழ் திரைப்படங்களையும் உலகளாவிய சுயாதீன சினிமாவையும் ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெறும் இவ்விழா, தமிழ் மற்றும் பிற நாடுகளின் கலை, கலாசாரம், சமூக வாழ்வு மற்றும் பாரம்பரியங்களை பரிமாறிக்கொள்ளும் முக்கிய சர்வதேச மேடையாக அமைந்துள்ளது.

கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

சுமார் ஐந்து இலட்சம் கனேடியத் தமிழர்களை சென்றடையும் இவ்விழா, இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே நடைபெறும் முக்கிய தமிழ் திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

புதிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது படைப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை உருவாக்குவதற்கும் இது சிறந்த வாய்ப்பாக அமையும்.

எனவே, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆக்குனர்கள் தங்களது படைப்புகளை www.ttff.ca இணையதளத்தின் ஊடாக ஆகஸ்ட் 11ஆம் திகதிக்குள் சமர்ப்பித்து, இந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"