BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு

யாழ். கரவெட்டி பிரதேச சபை விவகாரம்; நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவு

யாழ்ப்பாணம் கரவெட்டி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டிருந்த கரவெட்டி பிரதேச சபையின் வருமானப் பரிசோதகர் பவ கீர்த்தனனுக்கு, தலா ரூ.100,000 பெறுமதியான நான்கு ஆட்பிணைகளில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பிரதேச சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்கள் அலுவலக வருகையைப் பதிவு செய்த பின்னர் கடமை நேரத்திலேயே நீதிமன்றத்துக்கு வந்து பிணைக் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அச்சுறுத்தும் வகையில் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடரவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"