BREAKING
சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம் காகிதக் கோப்பைகளில் சூடான பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு ஆபத்தா? நிபுணர்கள் கூறும் விளக்கம் டெங்கு பரிசோதகர்களாக மாறுவேடமிட்ட பொலிஸார்; ஹெரோயின் விற்பனை சந்தேகநபர் அம்பாறையில் அதிரடியாக கைது நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் 31 வயது இளைஞர் கைது அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம் காகிதக் கோப்பைகளில் சூடான பானங்கள் அருந்துவது உடல்நலத்திற்கு ஆபத்தா? நிபுணர்கள் கூறும் விளக்கம் டெங்கு பரிசோதகர்களாக மாறுவேடமிட்ட பொலிஸார்; ஹெரோயின் விற்பனை சந்தேகநபர் அம்பாறையில் அதிரடியாக கைது நெடுங்கேணியில் 78 கிலோ கேரள கஞ்சாவுடன் 31 வயது இளைஞர் கைது அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு
யாழ்ப்பாண மாவட்டத்தில் டிஜிட்டல் வாக்காளர்களுக்கான கல்விப் பயிற்சி அமர்வு

LIRNEasia-வின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட "Learn, Play, Vote" (கற்றல், விளையாட்டு, வாக்கு) எனும் கேமிங் செயலியை அடிப்படையாகக் கொண்ட வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம், CaFFE அமைப்பின் ஏற்பாட்டிலும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சிவபாலராஜா தினேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், யாழ் மாவட்டத்தில், 2026 ஜூலை 01 ஆம் திகதி அன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

CaFFE அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் திருமதி சுரங்கி ஆரியவன்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக LIRNEasia நிறுவனத்தின் Senior Research Manager திரு. இசுரு சமரத்துங்க அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வின் பிரதம வளவாளராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முன்னாள் செய்திப் பணிப்பாளரும் டிஜிட்டல் ஊடகப் பயிற்றுவிப்பாளருமான திரு. ஜூனைட் எம். ஹாரிஸ் அவர்கள் பங்கேற்றார். அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரும் அரசறிவியல் துறைத் தலைவருமான கலாநிதி திரு. விக்னேஸ்வரன் அவர்களும், முன்னாள் பொருளியல் துறைத் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான திரு. சி. உதயகுமார் அவர்களும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு தமது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இப்பயிற்சி அமர்வில் பங்கேற்ற இளைஞர்கள், டிஜிட்டல் தளத்தின் ஊடாக தேர்தல் செயல்முறை குறித்த தகவல்களை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர். விளையாட்டு வழிக் கற்றல் அணுகுமுறையின் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெற்றதுடன், வாக்காளர் கல்வியின் முக்கிய அம்சங்கள் குறித்த தங்களது புரிதலையும் மேம்படுத்திக்கொண்டனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"