BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

பொசன் போயாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூட உத்தரவு

பொசன் போயாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூட உத்தரவு

2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு மதுவரி திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்னவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 29 ஆம் திகதி அனுசரிக்கப்படவுள்ள பொசன் போயா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் ஜூன் 28 ஆம் திகதி இரவு முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள தேசிய பொசன் வார நிகழ்வுகளை முன்னிட்டு, ஜூன் 26 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை குறிப்பிட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை செயல்படாமல் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பொசன் பண்டிகை காலத்தில் மதச்சார்பான நிகழ்வுகள் மற்றும் பக்தி வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"