BREAKING
வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்! வடக்கு கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க வடக்கு–கிழக்கு மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு! குதிரைக்குட்டியை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது - குதிரையேற்ற சேவையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை தென் கொரியாவுக்கு 125 மில்லியன் டொலர் ஆயுத விற்பனை: அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை! அமெரிக்காவில் 49,000இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் கைது: ட்ரம்ப் ஆட்சியில் புதிய உச்சம் படம் ஓடவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” – நடிகையின் அதிரடி சவால்!

இரத்தினக்கல் மோசடி விசாரணை: எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

இரத்தினக்கல் மோசடி விசாரணை: எஹலியகொட பொலிஸ் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிப்பு

இரத்தினக்கல் திருட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த குறித்த அதிகாரி, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு இரத்தினக்கல் திருட்டு தொடர்பான முறைப்பாட்டை விசாரிக்கும் போது, சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களிடமிருந்து பணத்தை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை முன்னெடுக்காமல் இருந்ததாக அவர்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எதிராக பாதிக்கப்பட்ட இரு நபர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, குறித்த அதிகாரி தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புடைய மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வழக்குடன் தொடர்புடைய புகார்தாரர்கள் அல்லது சாட்சிகளுக்கு எந்தவித அழுத்தமும் வழங்கக் கூடாது எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கப்படுகின்றது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"