மலையாள திரையுலகின் மிக வெற்றிகரமான த்ரில்லர் பிரான்சைஸான 'த்ரிஷ்யம்' படத்தின் மூன்றாவது பாகம் (Drishyam 3), கடந்த மே 21 அன்று உலகம் முழுவதும் மிகப்பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.
ஜார்ஜ்குட்டியாக மோகன்லால் மீண்டும் மிரட்டியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
வாரநாட்களிலும் (Weekdays) நிலையான வசூலைப் பெற்று வரும் த்ரிஷ்யம் 3, தனது 6 நாட்களின் முடிவில் உலகளவில் ரூ. 170.32 கோடிக்கும் மேல் மொத்த வசூல் (Gross Collection) செய்து சாதனை படைத்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் விபரங்கள் (தோராயமாக):
இந்திய வசூல் (Net): ரூ. 68.60 கோடி
கேரளா வசூல் (Gross): ரூ. 51 கோடிக்கும் மேல் (இப்படத்திற்கு மிகப்பாரிய பலமாக கேரளா சந்தை அமைந்துள்ளது).
வெளிநாட்டு வசூல் (Overseas Gross): ரூ. 90.70 கோடி (வளைகுடா நாடுகள், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வசூல் அள்ளுகிறது).
ஆடுஜீவிதம் வசூல் முறியடிப்பு: வெறும் 6 நாட்களில் ரூ. 170 கோடியைக் கடந்ததன் மூலம், பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி ரூ. 157.6 கோடி வசூலித்த 'ஆடுஜீவிதம்' (Aadujeevitham) திரைப்படத்தின் வாழ்நாள் உலகளாவிய வசூலை த்ரிஷ்யம் 3 முறியடித்துள்ளது.
ரூ. 200 கோடி கிளப்: மலையாள சினிமாவில் 'துடரும்' (Thudarum) மற்றும் 'L2: எம்புரான்' (L2: Empuraan) ஆகிய படங்களுக்குப் பிறகு ரூ. 200 கோடி கிளப்பில் இணையவுள்ள மோகன்லாலின் மூன்றாவது திரைப்படம் என்ற பெருமையை த்ரிஷ்யம் 3 விரைவில் பெறவுள்ளது. இந்த வார இறுதிக்குள் (2nd Weekend) இப்படம் ரூ. 200 கோடி மைல்கல்லை அசால்ட்டாக எட்டிவிடும் என்று சினிமா வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மல்டி-லாங்குவேஜ் ரிலீஸ்:
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படத்திற்கு, மலையாள பதிப்பிலேயே உலகளவில் 80%-க்கும் அதிகமான வசூல் கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ்குட்டியின் அடுத்த ட்விஸ்ட் மற்றும் க்ளைமாக்ஸ் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக