BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

எக்ஸ் தளத்திற்குத் தடை? - பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை!

எக்ஸ் தளத்திற்குத் தடை? - பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடும் எச்சரிக்கை!

எக்ஸ் தளத்தின் 'குரோக்' (Grok) எனும் ஏஐ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

இளவரசியின் போலிப் படம்: இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் (Princess of Wales) உட்படப் பல முக்கியப் பெண்களின் புகைப்படங்கள் ஏஐ மூலம் ஆபாசமாக மாற்றப்பட்டு வைரலாகின. இது பிரித்தானிய அரச குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாராளுமன்றக் குழுவின் முடிவு: பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் எக்ஸ் தளம் செயல்படுவதாகக் கூறி, இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பெண்கள் மற்றும் சமத்துவக் குழு கடந்த 7-ஆம் திகதியே அத்தளத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

கடுமையான சட்டம்: இங்கிலாந்தின் புதிய ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் (Online Safety Act) கீழ், விதிகளை மீறும் நிறுவனங்களுக்குப் பில்லியன் கணக்கில் அபராதம் விதிக்கவோ அல்லது அந்தத் தளத்தையே முடக்கவோ அதிகாரமுண்டு.

பிரதமரின் நிலைப்பாடு: "பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது" என்று தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், எக்ஸ் நிறுவனம் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"