BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

கனடா டொராண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர் கைது

கனடா டொராண்டோவில் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திகுத்து தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர் கைது

Toronto நகரின் Etobicoke பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்பு அருகே நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்த Toronto Police Service அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, சம்பவத்தின் காரணம் மற்றும் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"