BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

வயது சிறுமி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! அமெரிக்காவில் குற்றவாளிக்கு மரண தண்டனை

வயது சிறுமி கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு! அமெரிக்காவில் குற்றவாளிக்கு மரண தண்டனை

United States of Americaவில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Paradise பகுதியில் 2022ஆம் ஆண்டு Athena Strand என்ற 7 வயது சிறுமி மாயமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், சிறுமியின் வீட்டிற்கு பார்சல் வழங்க வந்த FedEx நிறுவன டிரைவரான Tanner Horner என்பவரே சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையின் பின்னர், சிறுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த வழக்கில் வாகனத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் ஒலி ஆதாரங்கள் முக்கிய சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

விசாரணையின் போது குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சிறுமியை தாக்கி கழுத்தை நெரித்து கொன்றதாகவும் தெரியவந்தது. சமூகத்திற்கு தொடர்ந்து ஆபத்தான நபராக இருக்கக்கூடும் என நீதிமன்றம் கருதியதையடுத்து, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"