லொறியில் சிக்கி பிரிந்த உயிர் ; இரவில் நேர்ந்த துயரம்

கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
லொறியொன்றில் சிக்கிய 33 வயதுடைய நபர், வெவன்டன்வத்த, தவலன்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துக்குப் பிறகு அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், அங்குச் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சடலம் தற்போது நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து ஏற்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் லொறி சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.