காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து பாடசாலை மாணவர் சம்பவ இடத்திலேயே பலி!!
காரும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்து பாடசாலை மாணவர் சம்பவ இடத்திலேயே பலி!!
இப்பலோகம, மகாஇலுப்பள்ளம பகுதியில் காரும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மகாஇலுப்பள்ளம கும்புக்கந்த பிரதேசத்தில் வசிக்கும் கெக்கிரவ நடுநிலைப் பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பயிற்சி வகுப்பை முடித்து விட்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பும் வேளையில் இந்த விபத்து இடம்பெறறுள்ளது.
குறித்த மாணவரின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.
எதிரே வந்த கார் மாணவன் மீது மோதிவிட்டு சாலையை விட்டு அருகில் இருந்த தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதி நின்றது..
விபத்தில் காரும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.