சிறுவர்களிடையே பரவி வருவது அடினோவைரஸின் புதிய நிலையாக இருக்கலாம்!!
சிறுவர்களிடையே பரவி வருவது அடினோவைரஸின் புதிய நிலையாக இருக்கலாம்!!
ஒரு குழந்தைக்கு இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பின், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது
கடந்த சில மாதங்களாகவே சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலானது இன்ஃப்ளூயன்ஸாவை விட அடினோவைரஸால் ஏற்படும் புதிய நிலையாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கடந்த காலங்களில் அனைத்து சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் தினமும் பதிவாகும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதிக காய்ச்சல், இருமல் மற்றும் வாந்தி பேதி போன்றவை குறித்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக தென்பட்டுள்ளன. அவர்களில், ஒரு சிறுபான்மை நோயாளர்களுக்கு கண்களில் பூளை வடிதல் போன்ற அறிகுறிகளும் தென்பட்டுள்ளன.
ஆகவே, இது இன்ஃப்ளூயன்ஸாவை விட அடினோவைரஸால் ஏற்படும் புதிய நிலையாக இருக்கலாம் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், அவர்கள் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டாலும் இது அடினோ வைரஸின் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
குறித்த இந்த வைரஸ் தற்போது இளம் குழந்தைகளிடையே மிக விரைவாக பரவி வருகின்றது.
ஒரு குழந்தைக்கு இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருப்பின், மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.
மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றினால் சில நாட்களில் இந்த காய்ச்சல் குணமாகும்.எனினும் சிலருக்கு வைரஸ் நிலைக்குப் பிறகு இரண்டாம் நிலை பக்டீரியா தொற்று ஏற்படலாம்.
இதற்கிடையில், ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு ஏற்படும் போது இருமல் நீங்காத நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும் .
இதேவேளை, சிறுவர்களுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வைரஸ் காய்ச்சல் குழந்தைகளிடையே மிக விரைவாக பரவுகிறது, எனவே பொது ஆரோக்கியத்திற்கான பின்வரும் குறிப்புகள் நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம்.
குறித்த சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் கூடிய குழந்தைகளை பாலர் பாடசாலை,பாடசாலை , பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் கூடுதல் வகுப்புகளில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி அவர்கள் குணமடையும் வரை வீட்டிலேயே வைத்திருங்கள்.
குழந்தையின் வயது மற்றும் எடையைப் பொறுத்து ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் பாராசிட்டமால் அளவைக் கொடுக்க வேண்டும்.
திரவ உணவு மற்றும் பானங்கள் கொடுங்கள்.
நன்றாக தண்ணீர் குடிக்கவும். கொதித்தாறிய தண்ணீரை குடிப்பது நல்லது.
மேலும், உணவு அல்லது பானங்கள் வீட்டில் சமைக்கப்பட்டு, சூடு இல்லாதிருந்தால், உணவை மீண்டும் சூடாக்கி, நோயாளிக்கு சூடாக பரிமாறுவதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம் என வைத்தியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.