பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இடமாற்றம்!
பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் இடமாற்றம்!
பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் நீல் ஹப்புஹின்ன திடீரென ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது நிர்வாக அமைச்சின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோக நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது