மயான சர்ச்சை துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது-நாகர்கோவில்!
சுடலை ஒன்றிற்கான சுற்று மதில் அமைப்பது மொடர்பில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட குழப்பம் துப்பாக்கிச்சூடு நடத்துமளவில் கலவரமானது.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்குப் பகுதியில் இடுகாடு மற்றும் சுடுகாடு உள்ள நிலையில் மேலும் ஒரு மயானம் ஒன்றிற்கான சுற்றுமதில் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டல் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது.
மூன்றாவது மயானம் ஒன்றிற்கான தேவை இல்லை , அதனால் குறித்த மயானத்தை அமைக்க நாகர்கோவில் கிழக்கு மக்கள், பொது அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்துள்ளனர்.
இதனால் இரண்டு தரப்புக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு வந்து, நேற்றைய தினம் மயானம் அமை்கும் தரப்பில் ஒருவருக்கு பிலேடினால் வெட்டி காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பருத்தித்துறை பொலிஸ் என தெரிவிக்கும் மக்கள் அவர்கள் சாதாரண உடையில் வந்திருந்ததாகவும், விசாரணை என்ற பெயரில் பொதுமக்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர்.
இத் தகறாறு தொடர்பிலான விசாரணைகளுக்காகவே பருத்தித்துறை பொலிஸார் தமது பகுதிக்கு சாதாரண உடையில் வந்திருந்ததாகவும், அவர்களே துப்பாக்கிச் சூடு நடாத்தியதாகவும், பொல்லுகளால் இளைஞர்கள், பெண்களைத் தாக்கியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.